அண்மைக்காலமாக நஞ்சில்லா உணவுப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது. அதையொட்டி இயற்கை விளைபொருள் விற்பனை அங்காடிகள் பெருகிவருகின்றன. இயற்கை விவசாயப் பரப்பளவும் அதிகரித்து வருகிறது. தனக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் இயற்கைவழி வேளாண்மையில் கரும்புச் சாகுபடி செய்து வருவதுடன், வயல்வெளியில் ஆலை அமைத்து, நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்துவருகிறார் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்துள்ள பட்டையகாளிபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி தெய்வசிகாமணி. அவரது தோட்டத்தில் நாட்டு சர்க்கரை தயாரிப்பு குறித்து எடுக்கப்பட்ட காணொளி! #Sugarcane #Sugar #PasumaiVikatan
நிருபர் : ஜி.பழனிச்சாமி
வீடியோ : க.தனசேகரன்
வீடியோ ஒருங்கிணைப்பு & எடிட்டிங் : துரை.நாகராஜன்
பின்னணி குரல் : நிவேதா