ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் விளையாட போகும் விராட் கோஹ்லி

2018-05-09 758

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி-20 போட்டிகளுக்கான அணிக்கு விராட் கோஹ்லி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் அவரால் விளையாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இங்கிலாந்து செல்கிறது. அங்கு மூன்று டி-20 போட்டிகள், மூன்று ஒருதினப் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முன்னதாக ஜூன் 27 மற்றும் 29ம் தேதிகளில் அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.

virat kohli going to play for two team

Videos similaires