பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்துள்ளார். இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கும் விதமாக சென்னையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் 10வது பிரம்மாண்ட கண்காட்சி நடைபெற்று வருகிறது. 47 நாடுகளைச் சேர்ந்த ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. தொழில்துறை உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலான கருத்தரங்கங்களும் இந்த கண்காட்சி அரங்கில நடைபெற்று வருகின்றன.
PM Narendra Modi today visiting Chennai for the inauguration function of Defence Expo 2018 security tigtened up in the city.