தென்மாநிலங்களை வளைக்க பாஜக ஆபரேஷன் திராவிடம் என்ற திட்டமு போட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியையும் தமிழகத்தில் அதிமுகவில் நடந்த களேபரங்கள், புதிய கட்சிகள் தொடக்கம் என்று நடக்கும் அக்கப்போருகளையும் பார்த்தால் தமிழகத்தில் ஏற்கனவே ஆபரேஷன் ராவணா தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. நாடு முழுவதும் தாமரை மலர வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறது பாஜக. 2014ல் பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக அதற்குப் பிறகு மாநிலங்களை குறி வைத்து தாமரையை மலர வைத்து வருகிறது. மாநலிக் கட்சிகளுடன் கூட்டு, ஆட்சியை இழந்த கட்சிக்கு ஆதரவு என்று பாஜக எப்படியோ 20 மாநிலங்களை கைப்பற்றிவிட்டது.
Is Operation Ravana already begins its process in Tamilnadu? From 2016 the political scenario of Tamilnadu is not static is it the reason of BJP's political play?