தமிழகத்தில் தாமரை மலரும், மலர்ந்தே தீரும், விரைவில் மலரும், கண்டிப்பாக மலர்ந்து விடும் என மேடைக்கு மேடை பேசி வந்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையின் சமீபத்திய பேச்சுக்களில் கூட இந்த வார்த்தைகளை நாம் காண முடிவதில்லை. தமிழகத்தில் தாமரை மலர்வது இருக்கட்டும், தாமரையின் விதைகளைக்கூட நாம் தூவ முடியாது என்ற அவநம்பிக்கை கூட அவர்களுக்கு ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்கு பிறகு வந்திருக்கலாம்.
இதன்வெளிப்பாடு தான் மறைமுகமாக அவர் தமிழக மக்களை நிர்பந்திக்க ஆரம்பித்துள்ளனர். பாஜகவுக்கு வாக்களித்தால் கண்டிப்பாக தமிழகம் முன்னேற்றம் பெறும் என்ற வார்த்தை பாஜகவினர் அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனர்.
பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்ததிலிருந்து தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இழப்பீடு, நிதி ஒதுக்கீடு, காவிரி விவகாரம் என அனைத்திலும் தமிழகத்திற்கு பாஜக மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துக்கொண்டு தான் வருகிறது. இப்படி நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழகம் மிரட்டப்பட்டாலும், அதைப்பற்றி கவலைப்படாத தமிழர்கள் ஆர்.கே.நகர் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்கை அளித்து பாஜகவை புறந்தள்ளினர். இதுதான் பாஜகவின் ஆப்ரேஷன் தமிழ்நாடுக்கு முக்கிய காரணம்.
As TN People continuously avoids bjp in the state politics. It is expected Amitshahs OPERATION TAMILNADU is in process.