சேலம் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் தனது படிப்பை சுதந்திரமாக தொடர விரும்புவதாக உச்சநீதிமன்றத்தில் ஹாதியா கூறியுள்ளார். தனது கணவர் தன்னை கவனித்துக் கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது ஒரே மகள் அகிலா. 12ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த அடைந்த அகிலா, இரண்டாவது முயற்சியில் தேர்ச்சியடைந்தார். இதையடுத்து ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சையில் இளநிலை படிப்பு படிப்பதற்காக சேலத்திற்கு வந்தார். வாடகை வீட்டில் தங்கி படித்து வந்த அவருடன் இரண்டு இந்து மாணவிகள் மற்றும் இரண்டு இஸ்லாமிய மாணவிகளும் தங்கியுள்ளனர். இஸ்லாம் மீதான ஈர்ப்பு அதிகரிக்கவே, தானும் மதம் மாற விரும்பினார்.
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மல்லாப்புரம் மாவட்டத்தின் பெரிந்தால்மன்னா நகரில் உள்ள ஜெசீனாவின் வீட்டுக்கு அகிலா சென்றார். ஜெசீனாவின் தந்தையிடம் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்ற தனது ஆசையையும் அவர் கூறினார். சில நாட்களில் மீண்டும் கல்லூரிக்கு திரும்பிய அகிலா இஸ்லாமிய பெண்களை போன்று தலையில் ஸ்கார்ப் அணிந்து சென்றார். இந்தத் தகவலை அவளது வகுப்பு தோழிகள் அவளின் தந்தைக்கு தெரிவித்துள்ளனர்.
அகிலாவின் பெற்றோர் சேலத்துக்கு வருவதற்குள் அவர் சேலத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து 2016 ஜனவரி 7ஆம் தேதி தனது மகளைக் காணவில்லை என்றும் அபுபக்கர் பாதுகாப்பில் அவர் இருக்கலாம் என்றும் பெரிந்தால்மன்னா காவல் நிலையத்தில் அசோகன் புகார் அளித்தார்.
English summary The Supreme Court ordered for Hadiya to be taken to Sivaraj Homeopathic medical college, Salem in Tamil Nadu by today or tomorrow.The dean will be responsible for Hadiya's well-beingordered Supreme Court.