குரங்குகளோடு வாழும் மங்கி மேன்.. உ.பியை கலக்கும் தாடி வைத்த தாத்தா!- வீடியோ

2017-11-25 3,406

உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலியில் குரங்குகளுடன் வாழும் மனிதர் ஒருவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். இவர் தினமும் 100 க்கும் அதிகமான குரங்குகளுடன் கொண்டாட்டமாக வாழ்ந்து வருகிறார். குரங்குகளின் உணவுத் தேவைக்காகவே இவர் தினமும் நிறைய செலவு செய்கிறார். கிருஷ்ண குமார் மிஸ்ரா என்ற இவர் தற்போது இந்தியா முழுக்க வைரல் ஆகியுள்ளார். வைரல் தாத்தாவான இவர் தனக்கு மனிதர்களை விட விலங்குகளையும், குரங்குகளையும்தான் ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார். இவர் பற்றி யூ- டியூபில் வெளியாகி இருக்கும் வீடியோக்களை பார்க்கவே தனி கூட்டம் காத்து இருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலியில் வசித்து வருகிறார் கிருஷ்ண குமார் மிஸ்ரா. 79 நிரம்பிய இந்த நபர்தான் இப்போது அந்த மாநிலத்தின் சூப்பர் ஹீரோ. இவருக்கு மக்கள் வைத்து இருக்கும் செல்லப் பெயர் 'தி மங்கி மேன்'. தினமும் இவரைச் சுற்றி 100க்கும் அதிகமான குரங்குகள் வாழ்ந்து வருகிறது. இவர் வருவதை பார்த்தாலே குரங்குகள் வேகமாக இவரை நோக்கி வந்து விடுகின்றன. பல நாட்கள் இவர் குரங்குகளுடனே படுத்து தூங்கியும் இருக்கிறார்.

A man in India gets completely swarmed by a barrel of monkeys who are eager to eat the bread in his hands