அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா
அந்த தெய்வம் உன் போல் இல்லை அம்மா
அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா
அந்த தெய்வம் உன் போல் இல்லை அம்மா
தொப்புள் கொடியாய்
ஒரு தோட்டம் அமைத்தாய்
பிள்ளை கனியாய்
என்னை படைத்தாய்
உன் உயிர் கரைத்து
என் உடல் வளர்த்தாய்
ஒன்றல்ல நீ செய்த தியாகம்
நான் வெல்வதே ஒரு தாயின் சபதம்
இரத்தத்திலே பாலெடுத்து
முத்தத்திலே மூச்செடுத்து
ஊட்டினாய் காட்டினாய் உலகத்தையே
பள்ளிக்கூடம் நான் படிக்க
சுல்லிகட்டை நீ சுமக்க
வெந்து நீ வெந்த சோறு போட்டாயே
உன் இடுப்போரமாய்
நான் இருந்தால் என்ன
அம்மா
வெகு தூரமாய் எங்கோ போனால் என்ன
என்னை நினைச்சு உருகும் தாயே
உந்தன் சபதம் முடிஞ்சு வருவேன்
அன்பு அம்மா அம்மா எந்தன் அம்மா
அந்த தெய்வம் உன் போல் இல்லை அம்மா
உன் உயிர் கரைத்து
என் உடல் வளர்த்தாய்
ஒன்றல்ல நீ செய்த தியாகம்
நான் வெல்வதே ஒரு தாயின் சபதம்...