பரளிப்புதூர் சாட்சியம்- பிறத்தியாள்VDO

2011-02-24 80

2011 பிப்ரவரி

பெட்ரோல், கம்பு, கடப்பாரை ஆகிய ஆயுதங்களோடு குடியிருப்புக்குள் 300 பேர் பெரும் ஆரவாரத்தோடு நுழைந்து வீடுகளைத் தாக்கினர். வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டன, ஓட்டு வீடுகளின் முன்புறமாகவும் பின்புறமாகவும் வேயப்படிருந்த கீற்று கொட்டகைகள் கொளுத்தப்பட்டன.

வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் பைக்குகளும், சைக்கிள்களும் கொளுத்தப்பட்டன. வீடுதோறும் பாத்திரங்கள், டிவி, பீரோ ஆகியவை உடைக்கப்பட்டன. வைக்கோல் படப்பு கொழுத்தப்பட்டது, கான்கீரிட் வீடுகள் கடப்பாரைகளைக் கொண்டு சேதப்படுத்தப்பட்டன. மெத்தை வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களும் கதவுகளும் உடைக்கப்பட்டன.