தமிழர் திருநாள் நிகழ்வு

2011-01-05 2,675

எதிர்வரும் 15.01.2011 அன்று தமிழர் திருநாள் நிகழ்வு புலம் பெயர் வாழ்வின் நீட்சியில், புதிய பரிமாணத்துடன் "கூட்டுபப் பொங்கலிடும் நிகழ்வாக" பாரீஸ் புறநகரில் நடாத்தப்படவுள்ளது.
'தைப்பொங்கல்- தமிழர்க்கு ஒருநாள்- தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவநாள்!' எனும் விருதுவாக்கியத்துடன் ஒருத்துவமாக தமிழார்வலர்களால் நிகழ்த்தப்படுகிறது.
ஊடகங்கள் என்ற வகையில் தமிழுடனான பயத்தைத் தொடரும் தங்களைப் போன்ற தமிழார்வலர்களின் உத்தாசைகளால் இந்நிகழ்வின் முக்கியத்துவம் பல்பரிமாண மிளிர்வுடன் உலகெங்கும் நிகழ பெரும் ஊக்குவிப்பை வழங்குவீர்களென நம்புகிறோம்.
இந்நிகழ்வில்
1. நாட்டுப்புறவியலில் பாண்டித்துவம் பெற்ற டாக்டர் கேஏ குணசேகரன் சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்கிறார். இவருடன் கிழக்குப் பல்கலைக் கழக கலைத்துறை முன்னாள் பீடாதிபதி இன்னிய அணியை உருவாக்கிய பாலசுகுமார் அவர்களும் அதிதியாகப் பங்கேற்கிறார்.
2. புலம் பெயர் நாடுகளில் வாழத் தலைப்பட்டுள்ள எம் சந்ததியினரில் தமக்கென்ற தனியனான தன்னாற்றலை வெளிப்படுத்தும் மூவர் இந்நிகழ்வில் கண்காட்சியை வழங்கிச் சிறப்பிக்கின்றனர்.
அ) தமிழின் தொன்ம இருப்பின் ஆவணக் கண்காட்சி - திரு அன்ரன் (ஜேர்மனி)
ஆ) பறவை வளர்ப்பில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவரின் காட்சியில் - மயில், கிளி, பல்வகைப் புறாக்கள் - திரு சுதா (பிரான்சு)
இ) மட்பாண்டச் செய்முறை விளக்கமளிக்கிறார் - செல்வி ஜில்பேட்ரின் (பிரான்சு)

வெளி அரங்க நிகழ்வாக இவை ஒருபுறமிருக்க மேடை நிகழ்வாக நம்மவர் தொன்ம அரங்க மீட்சியும் நீட்சியுமான நிகழ்வுகள் நடை பெற ஏற்பாடாகியுள்ளன
அனைவரையும் இன்முகத்துடன் அழைக்கிறோம்.

Videos similaires