பல்கலை மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு

2024-11-01 7,063

பதுளை – துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (01) காலை 7.45 மணியளவில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்தில் 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இடம்பெற்ற போது, குறித்த பேருந்தில் 41 பேர் வரை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Videos similaires