மட்டக்களப்பு வாகன விபத்தில் ஒருவர் பலி: மூவர் படுகாயம்

2024-01-16 4

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
குருக்கள்மடத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்
உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
களுவாஞ்சிகுடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டியும்
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற லொறியும் மோதி
விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்
முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

Videos similaires