வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமியை தந்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை மதுபோதையில் நேற்றுமுன்தினம் (27) குறித்த வீட்டிற்கு சென்று சிறுமியின் தலையில் கைப்பேசியால் தாக்கியுள்ளார்.
இது குறித்து அயலவர்கள் கிராம சேவகர் மற்றும் சங்கானை பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.