ஜேசன் விஜய் இயக்கப் போகும் படத்தில் யாரெல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு பட்டியலைத் தயாரித்து, அதை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். சூர்யா-ஜோதிகாவின் 16 வயது மகள் தியா ஹீரோயினாகவும், துருவ் விக்ரம் கதாநாயகனாகவும், ஏ.ஆர். ரஹ்மானின் வாரிசான அமீன் இசையமைப்பாளராகவும் இந்தப் படத்தில் கூட்டணி சேர்ந்தால் நன்றாக இருக்கும் என சொல்லி வருகின்றனர். இதற்கு முன்பாக இந்தப் பட்டியலில் நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்காவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.