இந்த வார முக்கிய நிகழ்வுகள்... முதன்மைச் செய்திகள்...

2023-03-13 1,742

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதியும் எஞ்சியவற்றில் செப்டம்பர் 1-ம் தேதியும் சுங்கக் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். அதன்படி ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து கார் மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு 5 சதவீதமும், கனரக வாகனங்களுக்கு 10 சதவீதமும் சுங்கக் கட்டணம் உயருகிறது. இதன்படி, இனிமேல் சென்னையிலிருந்து கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு கார்களில் பயணிப்பவர்கள் சுங்கக் கட்டணமாக கூடுதலாக 100 ரூபாய் வரைக்கும் மொய் எழுத வேண்டி இருக்கும்.

Videos similaires