டி.ஆர்.மகாலிங்கம்தான் சொந்தக் குரலில் பாடி நடிக்கிற கதாநாயகப் பாரம்பரியத்தின் கடைசி வாரிசு

2023-03-11 23

துவக்க காலத் தமிழ் சினிமாவில் நாயகனாகக் கோலோச்சுவதற்கு முதற்பெரும் தகுதி என்னவாக இருந்தது தெரியுமா? சொந்தக் குரலில் நன்றாகப் பாடத்தெரிந்திருக்க வேண்டும். நன்றாகப் பாடவேண்டுமென்றால் முறைப்படி இசையில் நல்ல பயிற்சி இருப்பதும் அவசியம். அப்படித்தான் பி.யூ.சின்னப்பா என்ற பெரும் பாட்டுக்காரர் சினிமாவுக்கு நாயகனாக வந்தார். அப்படித்தான் எம்.கே.தியாகராஜ பாகவதர் வந்தார். அதிலும் பாகவதருக்கு சற்றே கூடுதல் கவர்ச்சி இருந்தது. இளமை பொங்கும் கட்டிளம் காளைபோல தோற்றத்திலும் மிளிர்ந்த அவர்தான் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்பட்டார்.

டி.ஆர்.மகாலிங்கத்துடன் ‘அகத்தியர்’ படத்தில் சீர்காழியார் அகத்தியராக - நாயகனாக நடித்தார். இருவரும் சேர்ந்து பாடல்கூடப் பாடினார்கள். படத்தின் டைட்டிலில் தன் பெயருக்குக் கீழே தன் குருநாதர் மகாலிங்கத்தின் பெயர் வரக்கூடாது என்று உறுதிபடக் கூறிவிட்டார் கோவிந்தராஜன். மகாலிங்கமே இதை மறுத்தார். நீதானே படத்தின் நாயகன். உன் பெயர் முதலில் வருவதுதான் முறை என்றார் மகாலிங்கம். ஆனால், அன்று கல்லெறிய எவ்வளவு தயக்கம் காட்டினாரோ அதே அளவு இப்போதும் உறுதி காட்டி, இருவர் பெயரும் ஒரே வரிசையில் போடலாம் என்று யோசனை சொன்னபோதுதான் சம்மதித்தார் கோவிந்தராஜன். கலைத்துறையினர் தம் முன்னோடிகளை மனதார மதித்த பொற்காலம் அது, அல்லோ!

#காமதேனு #Kamadenu #KamadenuTamil #காமதேனுதமிழ்

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/