திருவிளக்குப் பூசைமொழி, #அருட்பெருஞ்சோதி வழிபாடு, #சாத்திரம், #சந்தியா #வந்தன வழிபாடு

2022-12-06 7

பதினெண்சித்தர்கள் தங்களுடைய "தாய்மொழியான அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியான, அருளூரு, அமுத, தெய்வீக செந்தமிழ் மொழி"யில் 43,73,118 ஆண்டுகளுக்கு முன்பு அருளிய இந்துவேதத்தில்,
1) தனிமனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும் பிறச்சினைகளை சந்தியா (சந்திக்காத) வண்ணம்
2) சந்தித்து வரும் பிறச்சினைகளை மீண்டும் சந்திக்காத வண்ணம்.
எல்லோரும் நல்லாராகிட, நல்வாழ்வு பெற்று, மனிதவாழ்வே புனித வாழ்வாகி, எங்கும் சமத்துவம் நிலவிட, 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்களால் அருளப்பட்ட
" மாலை வழிபாட்டுச் சாத்திரத்தை, ஒளி (விளக்கு) வணக்கப் பூசையை முதன்முறையாக காணொளியின் (YouTube) மூலமாக அவரது அடியான்களால் வெளியிடப்படுகின்றது.
மக்களில் ஆண் பெண் வேறுபாடின்றி எல்லா மதத்தினரும், எல்லாத் தரத்தினரும், எல்லா வகையினரும் இச்சாத்திரத்தைத் தினமும் ஓதி பயன்பெறலாம்.
தொடர்ந்து ஒரு மண்டல காலம்(48 நாள்கள்) ஓதினால், ஒளி வணக்க அருட்பெருஞ்சுடரில் வெளியாகின்ற 'அருள் அணு'க்கள் ஓதியவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் சார்ந்து அவர்களது பிறச்சினைகள் படிப்படியாக விலகிடுவதை அனுபவப் பொருளாக உணரலாம்.

"#சித்தர்நெறி" = கடவுளை காணும் வழிகள், கடவுளாகும் வழிமுறையை கூறுவது.
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)