கடலூர் ஏ.வடுகபாளையம் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், சுப்புராயலு, வரலட்சுமி ஆகிய மூன்று பேரும் கூலித் தொழிலாளிகள். இவர்களில் 3 பேரின் கூரை வீடுகள் பக்கத்து பக்கத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை திடீரென மூன்று கூரை வீடுகளும் அடுத்தடுத்து தீப்பிடித்தது எரியத் தொடங்கியது. அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர் வருவதற்குள் வீடுகள் முழுவதும் மளமளவென முற்றிலும் எரிந்து சேதமானது. இதில் மூன்று வீடுகளிலும் வைக்கப்பட்டிருந்தார் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீப்பிடித்த வீடுகளின் காரணம் குறித்து விசாரித்தபோது மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.