திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பந்தரபள்ளி பகுதியில் ரயில்வே துறை சார்பில் உயர தடுப்பு அளவு கம்பி ( high cage) அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை சார்பில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி வரும் லாரி மற்றும் உயரத்தை தடுக்கும் வண்ணமாக ஐகேஜ் எனப்படும் உயர தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுப்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளி வந்த ஆதித்யா என்ற பெயர் கொண்ட லாரியை ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். அப்போது பந்தரபள்ளி பகுதியில் அமைந்துள்ள உயிர தடுப்பு அளவு கம்பியில் லாரி மாட்டிக்கொண்டது அதன்பின்னர் செய்வதறியாமல் திகைத்த ஓட்டுநர். அக்கம்பக்கத்தினர் அழைத்து பத்திற்கும் மேற்பட்டோர் லாரியை தள்ள சொல்லி லாரியை எடுத்துச் சென்றார்.