திருநெல்வேலி மாநகராட்சி 28வது வார்டு பகுதிகளில் சாக்கடை நீர் கலந்த குடிநீர் வருவதால் மஞ்சள்காமாலை நோய் அதிகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகராட்சி மேயர் முன்பு வார்டு கவுன்சிலர் சந்திரசேகர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.