தனியார் பள்ளி வாகனம்; ஆய்வு மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர்!

2022-06-07 3

ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்களின் ஆய்வு இன்று ஈரோடு பெருந்துறை ரோடு, பவளத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் தலைமை தாங்கி வாகனங்களை ஆய்வு செய்தார். வாகனங்களில் அவசர வழி சரியாக செயல்படுகிறதா? பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக உள்ளதா? தீயணைப்பு கருவிகள் உள்ளதா என பல்வேறு சோதனைகள் செய்தார். இந்த வாகன சோதனையில் கிழக்குப் பகுதியில் 355 வாகனங்களும், மேற்கு பகுதியில் 43 வாகனங்களும், பெருந்துறையில் 463 வாகனங்கள் என மொத்தம் 861 வாகனங்கள் வந்தன. மேலும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து டிரைவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Videos similaires