கூல்ட்ரிங்ஸ் சாப்பிட்டவாறு கூலாக டூ வீலர் திருடும் திருடர்; சிசிடிவி காட்சிகள்!

2022-06-02 0

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கேத்தனூரில் வசித்து வருபவர் முருகேசன். இவர் பைக் மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.கடந்த மே 26 ஆம் தேதி அன்று பல்லடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மோட்டார் பழுது நீக்கும் கடைக்கு முருகேசன் சென்றுள்ளார். தனது இரு சக்கர வாகனத்தை கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு கடைக்கு உள்ளே சென்று பொருட்களை வாங்கியுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது தனது இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பல்லடம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடு போனதாக புகார் அளித்துள்ளார். குமரேசனின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவன் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் அருகில் இருந்த கடையில் பதிவாகி உள்ளது.

Videos similaires