உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெளியீட்டை நெல்லை மாவட்ட திமுகவினர் மேளதாளத்துடன் உற்சாகமாக கொண்டாடினர் மாவட்டச்செயலாளர் மேயர் துணை மேயர் யூனியன் சேர்மன் என திமுக பட்டாளமே திரையரங்கிற்கு நேரில் வந்து நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்தனர்.