பழனியில் இடும்பன் குளத்தில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெறவிருந்த கங்கா ஆரத்தி நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் நடைபெறவிருந்த கங்கா ஆரத்தி உற்சவ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகைதந்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை வர இருப்பது குறித்து அறிந்த திண்டுக்கல் மாவட்ட காவ்லதுறை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சத்திரப்பட்டி அருகே வருகை ஹெச்.ராஜாவை தடுத்து நிறுத்தி நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர்.அப்போது அவர் தான் பழனி செல்லவேண்டும் என்று கூறியதை அடுத்து அவரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.இதுகுறித்து தகவலறிந்த பாஜகவினர் ஏராளமானேர் சத்திரப்பட்டியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கைதான ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.