மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு கிளை போக்குவரத்து கழகம் உள்ளது. இந்த போக்குவரத்து கழகத்தில் சுமார் 80 க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இதில் சுமார் 17 டவுன் பேருந்துகள் சீர்காழியில் இருந்து பூம்புகார்,பெருந்தோட்டம், பழையார், திருமுல்லைவாசல், வடரங்கம், கீழமூவர்க்கரை, மயிலாடுதுறை, மணல்மேடு உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீர்காழி அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பெரும்பான்மையான டவுன் பஸ்கள் பராமரிப்பின்றி பஸ்சில் பல்வேறு இடங்களில் தகரங்கள் பெயர்ந்து உள்ளது. மேலும் முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி பழுதாகி நின்று வருகிறது. தமிழக அரசு மகளிர் பயணம் செய்ய டவுன் பஸ்கள் இலவசம் என அறிவிப்பு வெளியிட்டு அதில் இருந்து ஏராளமான பெண்கள் டவுன் பஸ்ஸில் பயணம் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் கண்ணாடி, பிரேக், ஹாரன், விளக்கு உள்ளிட்ட போதிய பராமரிப்பு இல்லாததால் பேருந்து ஓட்டுநர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன.இந்நிலையில் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பெருந்தோட்டம் செல்லும் அரசு டவுன் பேருந்து திடீர்னு பழுதடைந்ததால் பயணிகள் தள்ளி பேருந்தை இயக்க கூடிய நிலை ஏற்ட்டது எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பேருந்துகளை சீரமைக்க வேண்டுமென பயணிகளின் கோரிக்கை