விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் இவர் விருதுநகர் பாராளுமன்ற செயலாளராக உள்ளார் இந்த நிலையில் இன்று சிவகாசியில் உள்ள கட்சி நிர்வாகியை சந்தித்துவிட்டு சிவகாசி அருகே உள்ள இரட்டைப் பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது இதனை அறிந்த ஓட்டுநர் மாவீரன் என்பவர் காரை உடனடியாக நிறுத்தி காரில் இருந்த மூன்று பேரும் கீழே இறங்கி தப்பித்து விட்டனர்.