திருச்சி மத்திய சிறையில் வெளிநாட்டை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த கைதிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் . இதில் இலங்கை நாட்டை சேர்ந்த கைதி ராஜன் என்பவரை பார்ப்பதற்காக அவருடைய மனைவி அனு அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அவரை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. மேலும், கேட்டின் முன் நின்று கொண்டிருந்த காவலர்கள் அனுவை தரக்குறைவாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன் மனைவியை தரக்குறைவாக பேசியதால் ராஜன் அங்குள்ள மரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
வாசல் கதவுகளை தட்டி கதவை திறக்குமாறு சக கைதிகள் கூச்சலிட்டனர். தொடர்ந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்..