நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி திருக்கோவில் எதிரில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு டீக்கடை ஒன்றை திறந்துள்ளார். நேற்றையதினம் வழக்கம்போல் கடை வியாபாரத்தை முடித்துவிட்டு கல்லாப் பெட்டியில் பணத்தை வைத்து விட்டு பூட்டி சென்றுள்ளார்.பின்னர் காலையில் கடையை திறக்க வந்த போது கடையின் பின்புற கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டுள்ளது கண்டுள்ளார். இதனைதொடர்ந்து கடையில் மாட்டி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் கடையின் பின்புற கதவில் இருந்த பூட்டில் தீப்பொறி வைத்து பூட்டை உடைத்து கதவை திறந்து கடைக்குள் சென்றதை கண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து கடையில் உள்ள கல்லா பெட்டியை சோதனை செய்தபோது அதில் வைத்திருந்த சுமார் 8000 ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது என தொடர்ந்து நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு கடை உரிமையாளர் பாஸ்கர் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார் மேலும்