திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலங்காடு பகுதியில் நொய்யல் ஆற்றின் கரையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்,நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள்,குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள்,வாகனங்களையும்,ஆக்கிரமிப்பை அகற்ற வந்த பணியாளர்களை சிறை பிடித்தும்,இடம் வழங்க கோரியும்,இங்கிருந்து செல்ல போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், கருவம்பளையம் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.