2வது நாளாக எரியும் பெருங்குடி குப்பை கிடங்கு; துணை மேயர் மகேஸ்குமார் ஆய்வு!

2022-04-28 4

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி குப்பைக்கிடங்கில் புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. நுழைவுவாயில் அருகே பற்றிய தீ மளமளவென அருகில் உள்ள குப்பை மேடுகளுக்கும் தீ பரவி, கிடங்கில் ஒரு பகுதி முழுவதும் பற்றி எரிந்தது. இரண்டாவது நாளாக இன்றும் தீயணைப்பு பணிகள் தொடரும் நிலையில், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஸ்குமார் , சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.