தீண்டாமையை பின்பற்றும் திமுக; சமூக நீதி எங்கே போச்சு!

2022-04-19 21

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கிராமத்தில் கடந்த 15ஆம் தேதி சித்திரை 2-ஆம் தேதி கோலியனூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புத்துவாய் அம்மன் கோயில் குடமுழுக்கு மற்றும் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.லட்சுமணன் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் முன்னிலை வகித்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். ஆனால் கோலியனூர் ஊராட்சி (ரீசர்வ்ட் ஊராட்சி) மன்ற தலைவர் கண்மணி கன்னியப்பன் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் முற்றிலுமாக புறக்கணிக்க பட்டுள்ளாதாக கூறப்படுகிறது மேலும் இதனை பறைசாற்றும் வகையில் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு மற்றும் தேர் வெள்ளோட்ட கல்வெட்டு ஆகிய இரண்டு கல்வெட்டிலும் முதலமைச்சர் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழாக்குழுவினர் என அனைவர் பெயரும் இடம் பெற்ற நிலையிலும் அவரது பெயர் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

கோலியனூர் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Videos similaires