கடந்தாண்டு விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.1.50 கோடி செலவில் திருவக்கரையில் கழிவறை, கடைகள், ஓட்டுநர் ஓய்வறை உட்பட பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால், இந்த பஸ் நிலையம் பயன்படுத்தப்படவில்லை.. இதனால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக பஸ் நிலையம் மாறிவிட்டது.