திடீரென தீப்பற்றிய தனியார் பேருந்து; பதறிய மக்கள்!

2022-04-14 3

காஞ்சிபுரம் இந்திராநகர் பகுதியில் உள்ள பிரபல பைக் ஷோரூம் அருகே காலி இடத்தில் தனியார் தொழிற்சாலை பேருந்துகளை நிறுத்துவது வழக்கம் இந்நிலையில் நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் உள்ளே இருந்து திடீரென தீ பற்றி எரிய துவங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் பைக் ஷோரூம் ஊழியர்கள் அங்கிருந்த தீயனைப்பான் மற்றும் தண்ணீரை கொண்டு தீயை அனைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததை அடுத்து, உடனடியாக தீயனைப்பு துறைக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீயனைப்பு துறையினர் விரைந்து வந்து பேருந்து உள்ளே எறிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.