எப்ப பார்த்தாலும் பாஜகவுக்கு இது ஒரு பிரச்சனை; திருமா பதிலடி!

2022-04-11 28

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை பேச வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது கண்டிக்கத்தக்க செயல். இதன் மூலம் இந்தியா முழுவதும் இந்தி திணிப்பு முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. ஆங்கிலத்திற்கு பதில் ஹிந்தி கொண்டு வர வேண்டும் என்ற கருத்துடன் பாஜக செயல்பட்டு வருகிறது. 22 தேசியமொழிகள் உள்ளது. அதிலே ஹிந்தியும் ஒன்று. எனவே இந்தி தெரியாத மாநிலங்களில் கூட இந்தி பேச வேண்டும் என்று பாஜக நினைப்பது கண்டிக்கத்தக்க செயல். இதுபோன்ற ஒரு செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. பாஜகவின் இதுபோன்ற போக்கை முறியடிக்க, இடதுசாரிகள், காங்கிரஸ், மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள், திமுக ஆகியவை ஒன்றிணைந்து தேர்தலுக்கு மட்டுமல்லாமல்,தொடர்ந்து மக்களின் பாதுகாப்பை கருதி சனாதன சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.இதற்கு விடுதலை சிறுத்தை கட்சி என்றும் துணை நிற்கும்.

Videos similaires