வலையில் சிக்கிய அரிய வகை மீன்கள்; துட்டு மழையில் மீனவர்கள் !

2022-04-08 7

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர், இந்த நிலையில் நேற்று மீன் பிடிக்கச் கடலுக்கு மீனவர்கள் சென்றனர். இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள் வலையில் அரியவகை மீன்களாக கடவுறால் மீன்கள் சிக்கியுள்ளது. மேலும் இரண்டு கடவுறால் மீன்கள் சுமார் 60 கிலோ எடை கொண்டதாக இருப்பதோடு இந்த வகை மீன்கள் ஒரு கிலோ 400 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Videos similaires