கோவை வடவள்ளி மருதமலை சாலையில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவிகள் அங்குள்ள விடுதிகளில் தங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விடுதிகளுக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் உலாவுவதாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.