பான் கார்டு குறித்த கடைசி எச்சரிக்கை, இல்லைன்னா ரூ.1000 அபராதம் !

2022-03-31 51

பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான கால அவகாசமும் பலமுறை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக வெளியான அறிவிப்பின்படி, 2022 மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இந்த கால அவகாசம் நாளை ஒருநாளோடு முடிவடைகிறது.