இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து தலிபான்கள் அங்கு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை தலிபான் அரசு அமல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சிகரமான உத்தரவை தலிபான் அரசு தற்போது பிறப்பித்துள்ளது.