சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் நாடு முழுவதும் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. வீடுகளிலும், வணிக ரீதியாக நிறுவனங்களிலும் கேஸ் சிலிண்டர்கள் இன்றியமையாத தேவையாக உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் பைப் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதற்கான மெகா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதுகுறித்த தகவலை நாடாளுமன்றத்தில் பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார்.