கொரோனா காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே மார்ச் 25 அன்று உலகம் முழுவதும் வெளியானது. ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு, பட்டாசுகள் வெடித்தும், கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்