நாகர்கோவில் மாநகராட்சி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு ஒரே கண்ட்ரோல் ரூம் அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தி மாநகராட்சி கண்காணிக்க இருப்பதாக மாநகராட்சி மேயர் தகவல்-மேலும் வரும் நிதி ஆண்டில் ரூபாய் 88 கோடி செயல்திட்டங்கள் தீட்ட இருப்பதாகவும் இந்த 2022-23 நிதி ஆண்டில் 11 கோடிக்கு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி இருப்பதாகவும் இன்று நடைபெற்ற நாகர்கோவில் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மேயர் மகேஷ் தெரிவித்துள்ளார்-மேலும் ஒவ்வொரு வார்டுகளிலும் மேயர் முகாம்கள் அமைத்து பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார் இதற்கு மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்தனர்..