ிருப்பூரில் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாடு முழுவதும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை 50 ரூபாயும், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 200 ரூபாயும் அதிகரித்துள்ளது . இதனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டி சிடிசி கார்னர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலின்டர்களுக்கு மாலை அணிவித்து பாடையில் தூக்குவது போல நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.