திருவாரூர் அருகே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட ரோடு ரோலர் வாகனம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி சென்றபோது நன்னிலம் அருகே ஆண்டிபந்தல் என்ற பகுதியில் ரோடுரோலர் வாகனத்தின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. அப்பொழுது ரோடு ரோலர் வாகனத்தை ஓட்டுனர் சாலையின் ஓரம் நிறுத்தி விட்டு புகை வரும் அதன் காரணத்தை கண்டறிய வாகனத்தின் அருகில் சென்று உள்ளார். அப்பொழுது ரோடு ரோலர் வாகனமானது சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது நல்வாய்ப்பாக ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் அங்கு இருந்த அக்கம் பக்கத்தினர் நன்னிலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.