காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைக்கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தருமபுரியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்பாட்டம். கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு என்கிற இடத்தில் அணைக்கட்டும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு ஆதரவாக செயல்படுவதாக கூறி மாவட்ட தலைவர் சரவணன் தலைமையிலும், மாநில துணை பொது செயலாளர் தவமணி முன்னிலையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.