முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்த நாள் விழாவை அதிமுகவினர் ஒரு மாதமாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் இராமசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து கோயில் அருகே நாள் முழுவதும் அறுசுவை அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், பொதுமக்களுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தார்