குன்றத்தூர் ஷோரூமில் திருடர்கள் கைவரிசை; சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!

2022-03-10 40

குன்றத்தூர், பஜார் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஷோரூம் செயல்பட்டு வருகிறது இதில் வீட்டு உபயோக பொருட்கள், செல்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் ஷோ ரூமை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். இன்று காலை வழக்கம் போல் திறந்து பார்த்தபோது அதில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் குன்றத்தூர் போலீசார் ஷோ ரூமிற்குள் சென்று சோதனை செய்த போது உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ஷோரூமில் இருந்த விலை உயர்ந்த 35 செல்போன்கள், ஒரு எல்இடி டிவியை திருடி சென்றது தெரியவந்தது.

Videos similaires