ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் வாணி கருப்பணசாமி திருக்கோவில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் பங்குனி திருவிழா சென்ற வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று பரமக்குடி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 1000 பெண்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.