சிவகங்கை அருகே கொழுந்து விட்டு எரிந்த காட்டுத்தீ; தீயணைப்பு வீரர்கள் போராட்டம்!

2022-03-03 9

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி மண்மலை பகுதியில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில், இன்று மதியம் எதிர்பாராதவிதமாக மலையில் திடீரென காட்டுத் தீ பரவியது, காற்றின் காரணமாக வேகமாக பரவிய காட்டுத் தீ குறித்து சிங்கம்புணரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறை வீரர்கள், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

Videos similaires