சேலம் மாநகராட்சி 44 கோட்டத்தில் திமுக கூட்டணியில் விசிக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் இமயவர்மன் வெற்றி பெற்றதை யடுத்து அவர் இன்று பதவி ஏற்பு விழாவுக்காக அம்பேத்கரின் உருவ சிலையோடு மாமன்ற கூட்டத்திற்கு வந்தார். தொடர்ந்து பதவி ஏற்கும் போது அம்பேத்கர் சிலையை மேசையின் முன்வைத்து அம்பேத்கர் மீது ஆணையிட்டு அவரது வழிகாட்டுதலின்படி இந்த மாமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக் கொள்வதாகவும் அவரது நடவடிக்கைகள் மற்றும் கோட்பாடை வழி நடத்த போவதாகவும் உறுதி கூறி கண்ணீர் மல்க பதவியேற்றுக்கொண்டார்