தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி அமைதியாக நடைபெற்று முடிந்தது . இந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டிபட்டி பேரூராட்சியின்18 வார்டுகளின் உறுப்பினர்கள் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பதவியேற்றுக் கொண்டனர் . புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட வார்டு உறுப்பினர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் அலுவலருமான சின்னசாமி பாண்டியன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் .